740 பேருக்கு கொரோனா தடுப்பூசி
740 பேருக்கு கொரோனா தடுப்பூசி
காங்கேயம்
தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 170 பேருக்கும், நத்தக்காடையூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 170 பேருக்கும், வரதப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 150 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. காங்கேயம் திருப்பூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 250 பேருக்கும், மொத்தம் 740 பேருக்கு நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story