காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 7:39 PM IST (Updated: 24 July 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையான குமுளியில், கேரள கலால்துறை சோதனைச்சாவடியில் பீர்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீஸ்காரர்கள் நெபு சேவியர், ராஜ்குமார், ஸ்ரீகுமார், ரஞ்சித், ராஜீவ், அருண்நாயர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது தமிழகத்தில் இருந்து குமுளி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி கலால்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில் காரில் வந்தவர்கள், வண்டிப்பெரியார் 56-ம் மைல் பகுதியை சேர்ந்த ஜோபின் (வயது 26), மிதுன் (22) என்று தெரியவந்தது. முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதில் அளித்ததால், காரில் சோதனை செய்தனர்.

 அப்போது காரின் இருக்கை அருகே 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோபின், மிதுன் ஆகியோரை கைது செய்தனர். கூடலூரில் இருந்து ரூ.4 ஆயிரத்துக்கு கஞ்சாவை வாங்கி வந்தது தெரியவந்தது. 

Next Story