குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 8:09 PM IST (Updated: 24 July 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை முயற்சி வழக்கு

கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் சண்முகபாண்டி (வயது 46). இவர் கடந்த 28-ந் தேதி கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகபாண்டியை கைது செய்தனர்.
மேலும் இவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகளும் உள்ளது. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

இதேபோல் தூத்துக்குடி பொன்சுப்பையா நகரைச் சேர்ந்த செல்வகணேஷ் (29) என்பவர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் செல்வகணேசை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் செல்வகணேசை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார். 

குண்டர் சட்டம்

இதையடுத்து சண்முகபாண்டி, செல்வகணேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ்க்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் சண்முகபாண்டி, செல்வகணேஷ் ஆகியோரை குண்டர்  சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Next Story