திருவாரூர் மாவட்ட மைய நூலகம் திறப்பு


திருவாரூர் மாவட்ட மைய நூலகம் திறப்பு
x
தினத்தந்தி 24 July 2021 8:46 PM IST (Updated: 24 July 2021 8:46 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட மைய நூலகம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்தனர்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட மைய நூலகம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்தனர்.
நூலகங்களை திறக்க கோரிக்கை 
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. இந்தநிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும் நூலகங்கள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் உயர்கல்வி, நீட் தேர்வு போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும்  மாணவ-மாணவிகள் உரிய புத்தகங்களை வாசிக்க முடியாமல் அவதியடைந்தனர். எனவே உடனடியாக நூலகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆர்வத்துடன் மாணவர்கள்
இதனையடுத்து போட்டி தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் நலன் கருதி உரிய கட்டுப்பாடுகளுடன் நேற்று முதல் நூலகங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்ட மைய நூலகம் நேற்று திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் நூலகத்திற்கு வந்து புத்தகங்களை வாசித்தனர். 
அரசின் வழிகாட்டுதலின்படி நூலகத்திற்கு வருபவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. கட்டாயம் முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் 15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதிக்கப்படவில்லை என நூலக அதிகாரி தெரிவித்தார்.

Next Story