தையல்தொழிலாளி கைது


தையல்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 24 July 2021 9:55 PM IST (Updated: 24 July 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே அருள்புரத்தில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற தையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்
பல்லடம் அருகே அருள்புரத்தில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக்கொன்ற தையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பெண் கொலை
 பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியை சேர்ந்தவர் இளமாறன் வயது 30. பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி சரிதா 25. இவர்கள்  இருவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்குள் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.  இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாய்த்தகராறு முற்றிய நிலையில் மனைவி சரிதாவை, இளமாறன் சரமாரியாக கைகளால் தாக்கியுள்ளார். இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சரிதாவை  ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே வைத்துள்ளார். 
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரிதாவின் உடல் நிலை மோசம் அடைந்தது. உடனே அவரை ஆட்டோவில் வைத்து பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு இளமாறன் அழைத்து சென்றுள்ளார். அங்கு சரிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்துசரிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரிதாவின் உறவினர் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இளமாறனை தேடி வந்தனர்.
கணவர் கைது
 போலீசார் தேடுவதை அறிந்த  இளமாறன் தலைமறைவானார்.  இந்த நிலையில் நேற்று மாலை சின்னக்கரை பகுதியில் இளமாறன் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுங்கியிருந்த இளமாறனை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-

Next Story