வேகத்தடை இருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
வேகத்தடை இருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
கிணத்துக்கடவு
கோதவாடியில் வர்ணம் பூசப்படாததால் வேகத்தடை இருப்பது தெரி யாததால் வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சாலை சீரமைப்பு
கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் பழுதடைந்த தார்சாலை சீரமைக்கப்பட்டது.
அந்த ரோடு கோதவாடி வழியாக கொண்டம் பட்டி, செட்டியக்காபாளையம், நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறது.
இந்த ரோட்டில் பல இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டுனர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயிண்டால் வெள்ளை வர்ணம் பூசப்படும்.
அதை பார்க்கும் வாகன ஓட்டுனர்கள் வேகத்தடை உள்ள இடங்களில் வேகத்தை குறைத்து மெதுவாக செல்வார்கள். இதனால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும்.
வேகத்தடையால் விபத்து
ஆனால் கோதவாடியில் போடப்பட்ட ரோட்டில் வேகத்தடை இருப்பதை குறிக்கும் வகையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடையே விபத்துக்கு காரணமாக உள்ளது.
இரவு நேரங்களில் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில வாகன ஓட்டுனர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
இது குறித்து கோதவாடி ஊராட்சி சார்பில் நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சாலையில் வேகத்தடை உள்ள இடங்களில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது.
எனவே வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோதவாடி பகுதி உள்ள சாலை வேகத்தடையில் வர்ணம் பூசி விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோதவாடி ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story