புகையிலை விற்ற 28 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை விற்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி வடபாகம், மத்திய பாகம், தென் பாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், தெர்மல் நகர், புதுக்கோட்டை, திருச்செந்தூர் கோவில், ஆத்தூர், செய்துங்கநல்லூர், ஏரல், குரும்பூர், பசுவந்தனை, கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர், கயத்தாறு, கொப்பம்பட்டி, புதூர், சூரங்குடி, எப்போதும் வென்றான், எட்டயபுரம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் மற்றும் நாசரேத் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 28 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் 2 ஆயிரத்து 326 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story