வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு


வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு
x
தினத்தந்தி 24 July 2021 10:44 PM IST (Updated: 24 July 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரருக்கு சூப்பிரண்டு பாராட்டு

புதுக்கோட்டை, ஜூலை.25-
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டியில் சுடுகாடு அருகே கடந்த 23-ந் தேதி மின்கம்பத்தில் பராமரிப்புபணிகளை மின்சார வாரிய ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவிசெய்து கொண்டிருந்த குன்றாண்டார் கோவில்,ஆழ்வான்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (வயது25) என்பவர் மின்சாரம் தாக்கி மின் கம்பத்தில் உயிருக்கு போராடி தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த அங்குவந்த உடையாளிப்பட்டி காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பிரகாசை மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் மயக்க நிலையில் இருந்தஅவருக்கு போலீஸ்காரர் வெள்ளைச்சாமி தக்க நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உரியநேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு முதல் உதவி செய்து வாலிபரின் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரர் வெள்ளைச்சாமியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். இதேபோல புதுக்கோட்டை டவுன் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 700 கிலோ அளவில் பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.

Next Story