பா ஜ க வினர் ஆர்ப்பாட்டம்


பா ஜ க வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2021 11:05 PM IST (Updated: 24 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பா ஜ க வினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பிரதமர் மற்றும் தேசிய தலைவர்களை அவதூறாக பேசிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பங்குதந்தையை கண்டித்து பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட மேற்பார்வையாளர் தடா.பெரியசாமி, வக்கீல் செல்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இந்துக்களையும், இந்து தெய்வங்கள், பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர்களை அவதூறாக பேசிய பங்கு தந்தையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், கஜேந்திரன், செந்தில், நகர தலைவர் சர்தார்சிங் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story