தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு


தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 July 2021 11:38 PM IST (Updated: 24 July 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு.,  ஐ.என்.டி.யு.சி. சி.எல்.பி.எப். தொழிற்சங்கங்களின் சார்பில், நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை தனியார் மற்றும் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் அனுமதியின்றி நடைபெற்ற காரணத்தால் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி அபிநயா காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் வடக்கு போலீசார் ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி அழகர்சாமி, தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி மலையரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி சந்திரன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story