மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு


மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
x
தினத்தந்தி 24 July 2021 11:50 PM IST (Updated: 24 July 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டார்

தோகைமலை
தோகைமலை மெயின் ரோடு பகுதியில் கடந்த 5 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் வாகனங்களை வழிமறித்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாந்திவனம் மனநல காப்பக நிர்வாகத்தினர் அங்கு வந்து அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவர் திருச்சியில் உள்ள ஆத்துமா மனநல மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் சாந்திவனம் மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்து குணமடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என சாந்திவனம் காப்பகத்தின் இயக்குனர் அரசப்பன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story