தேசிய புலனாய்வு அதிகாரிகள் களக்காட்டில் திடீர் சோதனை


தேசிய புலனாய்வு அதிகாரிகள் களக்காட்டில் திடீர் சோதனை
x
தினத்தந்தி 25 July 2021 12:45 AM IST (Updated: 25 July 2021 12:45 AM IST)
t-max-icont-min-icon

தேசிய புலனாய்வு அதிகாரிகள் களக்காட்டில் திடீரென சோதனை நடத்தினார்கள்.

களக்காடு:
சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்து பதிவிட்டு கைதான களக்காடு வாலிபர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மேலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சர்ச்சை கருத்து

நெல்லை மாவட்டம் களக்காடு ஜவகர் வீதியை சேர்ந்தவர் சரவணக்குமார் என்ற அப்துல்லா (வயது 32). தற்போது இவர் மதுரையில் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவர் மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் மதுரை தெப்பக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த விசாரணைக்கு பின்னர், தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

வீட்டில் சோதனை

இந்த நிலையில் டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கொண்ட குழுவினர் களக்காடு வந்தனர். அங்கு ஜவகர் வீதியில் உள்ள சரவணக்குமார் என்ற அப்துல்லா வீட்டிற்கு நேற்று அதிகாலை திடீரென சென்று சோதனை நடத்தினர்
அப்போது அவரது தாயார் முத்துலட்சுமி, அண்ணன் சேதுராமன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

நண்பர்களிடம் விசாரணை

இதைத்தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில், களக்காட்டை சேர்ந்த அவருடைய நண்பர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
களக்காட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story