காவலர்களுக்கான சொந்த வீடு கட்டும் பணி


காவலர்களுக்கான சொந்த வீடு கட்டும் பணி
x
தினத்தந்தி 25 July 2021 12:46 AM IST (Updated: 25 July 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் காவலர்களுக்கான சொந்த வீடு கட்டும் பணிகளை கூடுதல் டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

சிவகங்கை,

சிவகங்கை ஆயுதப்படை அருகே காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் காவலர், தலைமை காவலர்களுக்கான 161 தனி வீடுகளும் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான 40 தனி வீடுகளும் கட்டப்பட்டு வருகிறது. இதில் ரூ.19 லட்சம் முதல் ரூ.25 லட்சம் மதிப்பிலான வீடுகளை காவலர்கள் பணம் செலுத்தி சொந்தமாக்கி கொள்ளும் விதமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் தற்சமயம் முடிவடையும் சூழ்நிலையில் உள்ளது. இந்த கட்டிடப்பணிகளை காவலர் வீட்டு வசதி வாரிய கூடுதல்.டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள பொறியாளர்களிடம் கட்டிடப்பணி குறித்து ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மரக்கன்றுகளையும் அவர் நட்டார்.இந்த ஆய்வு பணியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உடனிருந்தார்.


Next Story