சிவகங்கை,
பாரத மாதாவையும், பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவையும் தரக்குறைவாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட பா.ஜனதா சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார்.நகர் தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட பொது செயலாளர்கள் பாலமுருகன், செந்தில், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.