ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு மரியாதை


ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு மரியாதை
x
தினத்தந்தி 25 July 2021 1:03 AM IST (Updated: 25 July 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை:
ஜார்கண்டு மாநில ஆதிவாசி மக்களின் உரிமை போராளி பாதிரியார் ஸ்டேன் சுவாமி மும்பை சிறையில் இறந்தார். அவரது அஸ்தி தமிழகத்தில் முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஸ்டேன் சுவாமியின் அஸ்தி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, சேவியர் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோமிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழக கத்தோலிக்க துறவியர் பேரவை தலைவர் வேளாங்கண்ணி ரவி அணிவகுப்புடன் விண்ணரசி ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிறிஸ்தவ மக்கள், அரசியல் கட்சியினர் அஸ்திக்கு மரியாதை செலுத்தினர்.

Next Story