சரக்கு வாகனத்தில் மணல் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்


சரக்கு வாகனத்தில் மணல் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 25 July 2021 1:05 AM IST (Updated: 25 July 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனத்தில் மணல் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

திருப்பத்தூர்,

போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனத்தில் மணல் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

தப்பி ஓட்டம்

திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றில் மணல் மூடைகளை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை சென்றுள்ளனர். சாலையில் போலீசார் நிற்பதைக் கண்ட வாகன டிரைவர், உதவியாளர் ஆகியோர் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையே வெகுநேரமாக சாலையோரம் சரக்கு வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கிறதே என சந்தேகத்தில் போலீசார் அதை சோதனையிட்டனர். சோதனையின் போது சிமெண்டு மூடைகளில் மணலை அடைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. போலீசார் வாகன சோதனை நடத்துவதை பார்த்த கும்பல் சரக்கு வாகனத்தை அப்படியே நிறுத்தி விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

பறிமுதல்

இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தையும், அதில் ஏற்றப்பட்டு இருந்த மணல் மூடைகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் சரக்கு வாகனத்தை திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். சரக்கு வாகனம் யாருடையது?  மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார், யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story