களக்காடு அருகே காட்டு யானை அட்டகாசம்
களக்காடு அருகே தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது.
களக்காடு:
களக்காடு அருகே காட்டு யானை அட்டகாசம் செய்து பனை மரங்களை சாய்த்தது.
ஒற்றை யானை
நெல்லை மாவட்டம் களக்காடு புதுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் தலையணை மலையடிவார பகுதியான கள்ளியாற்றில் உள்ளது. இந்நிலையில் ஒற்றை காட்டு யானை அவரது தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தது. 2 பனை மரங்களை சாய்த்து போட்டது.
இதுபற்றி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் வனச்சரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் யானை சாய்த்த பனை மரங்களை ஆய்வு செய்தனர். யானையை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் கவலை
ஏற்கனவே களக்காடு அருகே உள்ள கள்ளிகுளத்தில் கரடிகள் தோட்டத்தில் புகுந்து தண்ணீர் குழாய்களை உடைத்து அட்டகாசம் செய்தது.
இந்த நிலையில் யானை அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story