அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை
அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, அத்திப்பட்டி, பெரிய புளியம்பட்டி தெற்கு தெரு, மலையரசன் கோவில், சிட்டி பஜார், திருநகரம், விருதுநகர் ரோடு, எஸ்.எம்.பஜார், பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின் பகிர்மான செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story