ஊரடங்கு விதிமுறைகளை மீறி திருவிழா நடத்தியதாக வழக்கு
பாவூர்சத்திரம் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி திருவிழா நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கல்லூரணியில் போத்தி மாடசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறும். அதன்படி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காதது, அதிகப்படியான நபர்களை கூட்டம் சேர்த்தல், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story