பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு


பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 25 July 2021 2:52 AM IST (Updated: 25 July 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் நியூ சிட்டி புஷ்பா நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 36). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அம்மாபாளையத்தில் உள்ள பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில் வேலாயுதம் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதத்தின் மனைவி, அவர்களுடைய மகனுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வேலாயுதம் வீட்டில் தனியாக இருந்து, வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் வேலாயுதம் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக வேலாயுதம் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story