கோவையில் 175 பேருக்கு கொரோனா


கோவையில் 175 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 July 2021 3:36 AM IST (Updated: 25 July 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நீலகிரியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

175 பேருக்கு தொற்று

கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 57 வயது பெண், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர், 69 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 154 பேர் இறந்து உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 243 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரத்து 624 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 222 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் 3 பேர் பலி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 192 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 93 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

 இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 270 பேர் பூரண குணம் அடைந்தனர். நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்தனர். இதன் மூலம் இதுவரை 177 பேர் இறந்து உள்ளனர். தற்போது 745 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story