குடும்ப பிரச்சினையில் மாமனார், மாமியாரை தாக்கிய வாலிபர் கைது


குடும்ப பிரச்சினையில் மாமனார், மாமியாரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 July 2021 5:09 AM IST (Updated: 25 July 2021 5:09 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே குடும்ப பிரச்சினையில் மாமனார், மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அமீர் பேட்டை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகளை திருவள்ளூரை அடுத்த முதுகூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துளசி (வயது 27) என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.

இந்தநிலையில் திருமணமான நாளில் இருந்தே துளசி தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட துளசியின் மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பழனி அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் துளசியிடம் இதுகுறித்து கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த துளசி தன் மாமனார், மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பழனி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து துளசியை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story