அத்திப்பட்டு கிராமத்தில் ஆய்வு கூடத்துடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அத்திப்பட்டு கிராமத்தில் ஆய்வு கூடத்துடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தெருக்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியை சுற்றிலும் வடசென்னை அனல் மின் நிலையங்கள், எண்ணூர் துறைமுகம், நிலக்கரி சேமிப்பு கிடங்கு, சாம்பல் கழிவு குளங்கள, வல்லூர் தேசிய அனல் மின் நிலையம், தனியார் சிமெண்டு ஆலைகள் உட்பட மாசு உண்டாகக் கூடிய பல்வேறு நிறுவனங்கள் பல இயங்கி வருகிறது.
அனல் மின் நிலையத்தில் எரியூட்டப்பட்ட சாம்பல் கழிவுகளும், நிலக்கரி கிடங்கில் இருந்து நிலக்கரியும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சிமெண்ட் ஆலைகள், நிலக்கரி சாம்பல் ஆகியவற்றின் தூசிகள் காற்றில் கலந்து வந்து குடியிருப்புகளில் பரவி மாசு ஏற்படுத்தி வருகிறது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் மாசுவுடன் கூடிய காற்றை சுவாசிப்பதால் பல்வேறு சுவாச நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இது குறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் அலட்சியத்தால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதை தடுக்கம் வகையில் தூசியின் அளவு மாசுவின் தரம் ஆகியவற்றை பரிசோதனை செய்ய ஆய்வுக் கூடத்துடன் மாசுக் கட்டுப்பாட்டு அறையுடன் அலுவலகம் அமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story