மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கணவன்-மனைவி கைது + "||" + Husband and wife arrested for trying to break into house

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கணவன்-மனைவி கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கணவன்-மனைவி கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கணவன்-மனைவி 2 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து அம்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபுகுமார் (வயது 40). இவருடைய மனைவி விமலா. பிரபுகுமார் வேலைக்கு சென்றிருந்த நிலையில் விமலா வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் பிரபுகுமார் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு ஆணும், பெண்ணும் உள்ளே புகுந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மடக்கி பிடித்து அம்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், காசமநல்லத்தூர் பகுதியைச் சேர்ந்த கருணா பிரபு (36) மற்றும் அவருடைய மனைவி சவுமியா (36) என்பதும், இருவரும் பிரபுகுமார் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரிந்தது.

கருணாபிரபு மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளதும் தெரிந்தது. கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.