தூத்துக்குடி அருகே பெண்ணை தாக்கிய 4பேர் மீதுவழக்கு


தூத்துக்குடி அருகே  பெண்ணை தாக்கிய 4பேர் மீதுவழக்கு
x
தினத்தந்தி 25 July 2021 5:14 PM IST (Updated: 25 July 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ஆறுமுகநகரை சேர்ந்தவர் கல்யாணி (வயது 55). இவர் வீட்டின் முன்பு கல் மற்றும் கட்டைகளை போட்டு வைத்து இருந்தாராம். இதனை அதே பகுதியை சேர்ந்த முருகன், முருகன் என்ற குட்டி, பஞ்சவர்ணம், மாலதி ஆகியோர் அகற்ற வலியுறுத்தியுள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து கல்யாணியை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த கல்யாணி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story