தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு? போலீசார் விசாரணை


தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 July 2021 6:05 PM IST (Updated: 25 July 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மடத்தூர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மகன் அனிஸ்ராஜ் (வயது 25). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் மோட்டார் சைக்கிள் பெரும்பாலும் எரிந்து சேதம் அடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளுக்கு யாரேனும் மர்ம நபர்கள் தீவைத்து எரித்தார்களா?, அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரியில் இருந்து மின்சாரம் கசிந்து தீப்பிடித்து எரிந்ததா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Next Story