கீழே விழும் அபாயத்தில் இருக்கும் மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
கீழே விழும் அபாயத்தில் இருக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாணாபுரம்
திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்டது நவம்பட்டு சாலை. இந்தச் சாலை அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்ச அனைத்தும் பெயர்ந்து கம்பிகள் மட்டும் வெளியில் தெரியும் படி உள்ளது.
கம்பத்தின் மேல்பகுதி முழுவதும் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் காற்றடித்தால் மின்கம்பம் ஆடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தற்போது ஆடி காற்று வேகமாக வீசுவதால் ஆடும் மின்கம்பத்தை பார்த்ததும் டிரைவர்கள் வாகனத்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு பின்னர் ஓட்டிச் செல்கிறார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமான மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story