தேனியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


தேனியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2021 8:22 PM IST (Updated: 25 July 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி:
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தேனி பங்களாமேட்டில் பா.ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டியன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி, தேசிய செயற்குழு உறுப்பினர் கனகராஜ், கோட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story