புதிதாக 8 பேர் கொரோனாவால் பாதிப்பு
புதிதாக 8 பேர் கொரோனாவால் பாதிப்பு
சுல்தான்பேட்டை
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து மிக வேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பொள்ளாச்சி நகரில் ஒருவருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 3 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில்4 பேர் என மொத்தம் 8 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்டனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியத்தில் யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை.
கொரோனா பரவல் மிகவும் குறைந்து இருந்தாலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற செயல்களையும், அரசின் விதிமுறைகளையும் பொதுமக்கள் கைவிடாமல் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். என, சுகாதாரத் துறையினர், வருவாய்துறையினர் பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் வா.சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், நேற்றுசெலக்கரிச்சல் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 55 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களிடம் பெறப்பட்ட சளி மாதிரிகள் பொள்ளாச்சிஅரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பட்டன.
சுல்தான்பேட்டைஒன்றியம் அப்பநாயக்கன்பட்டி தெற்கு வீதியில் நேற்று ஒரே வீட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் தெற்குவீதியில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் படுத்தினர்.
இதனை தொடர்ந்து அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம்தெற்கு வீதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது. இதனால் அந்த வீதிக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story