746 பேர் மீது வழக்கு


746 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 July 2021 9:16 PM IST (Updated: 25 July 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறிய 746 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 53 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 487 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 149 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 57 பேர் மீதும் என 746 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.85 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டு உள்ளது. இது தவிர,  முககவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 40 பேரிடம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒருவரிடமும் அபராதம் வசூலிக் கப்பட்டது. தேவை யின்றி சாலைகளில் சுற்றிதிரிந்ததாக 2 மூன்று சக்கர சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story