மதுபாரில் திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேர் கைது


மதுபாரில் திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 July 2021 10:22 PM IST (Updated: 25 July 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மதுபாரில் திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி

ரகசிய தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் கச்சிராயப்பாளையம் சாலையில்  வி.ஐ.பி.கார்டன் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை அருகில் உள்ள பாரில் சிலர் திருட்டுத்தனமாக மது விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக இந்திரா நகரைச் சேர்ந்த அருள்(வயது 50), நல்லாத்தூர் கிராமம் பாலு(46) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 63 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

அதே போல் கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூரில் அரசு மதுக்கடை அருகில் உள்ள பாரில் திருட்டுத்தனமாக மது விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த மனோகர்(43) என்பவரை கைது செய்த போலீசார் இவரிடம் இருந்து 36 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story