எம் ஜி ஆர் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை குறைவு


எம் ஜி ஆர் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை குறைவு
x
தினத்தந்தி 25 July 2021 11:01 PM IST (Updated: 25 July 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

வரத்து அதிகரிப்பு காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது.

கோவை

வரத்து அதிகரிப்பு காரணமாக கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. 

சின்னவெங்காயம் விலை குறைவு 

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டிற்கு தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ், அவரைக்காய், வெங்காயம், கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவை அதிகள வில் வருகின்றன. 

இங்கு சில்லரை வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு மைசூருவில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது.

 இதனால் கடந்த வாரத்தில கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையானது. 

தக்காளி கிலோ ரூ.18

மேலும் தக்காளி கிலோ ரூ.15-18, பாகற்காய் ரூ.35-40, புடலங்காய் ரூ.13-16, சுரைக்காய் ரூ.10-30, பெரிய வெங்காயம் ரூ.20-25, அவரை ரூ.35-40, மிளகாய் ரூ.40-46, கேரட் ரூ.50-70, பீன்ஸ் ரூ.60-70, காலிபிளவர் ரூ.30-40, கத்தரிக்காய் ரூ.20-35, வெண்டைக்காய் ரூ.30-40, பீர்க்கங்காய் ரூ.25-30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலையில் இருந்து சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்யும்போது கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகமாக இருக்கலாம்.

இறைச்சி வாங்க ஆர்வம்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள இறைச்சி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் நேற்று கறிக்கோழி விலை குறைந்து காணப்பட்டது. 

கடந்த வாரம் ரூ.300 வரை விற்கப்பட்ட கறிக்கோழி இந்த வாரம் ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது. நுகர்வு குறைவு காரணமாக இந்த விலை குறைவு ஏற்பட்டதாக இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

 ஒரிஜினல் நாட்டுக்கோழி கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது. ஆட்டு இறைச்சி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.750 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது.


Next Story