பயணிகள் ரெயில்களை இயக்க வியாபாரிகள் கோரிக்கை மனு
பயணிகள் ரெயில்களை இயக்க வியாபாரிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
லாலாபேட்டை
லாலாபேட்டை ரெயில் நிலை அதிகாரிகளிடம் நேற்று வியாபார சங்கத்தினர் பொதுமக்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், லாலாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ரெயில்கள் மூலம் கரூர், திருச்சி, ஈரோடு ஆகியவற்றில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனோ தொற்றின் காரணமாக பயணிகள் ரெயில்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பஸ் மற்றும் வாகனங்களில் சென்று வருவதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக லாலாபேட்டை வழியாக திருச்சி, கரூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story