ஆற்காடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது 23). கூலித் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நந்தினி அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கதிரவன் கடந்த 22-ந் தேதி வீட்டிலிருந்த கொக்கு மருந்தை (விஷம்) குடித்து உள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story