கடத்தூரில் சென்டர் மீடியனில் லாரி மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது
கடத்தூரில் சென்டர் மீடியனில் லாரி மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
கடத்தூர்:
லாரி கவிழ்ந்தது
ஆந்திராவில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவைக்கு புறப்பட்டது. இந்த லாரியை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வழியாக சென்ற போது காட்டாற்று பாலத்தின் சென்டர் மீடியனில் லாரி மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் ரமேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார் விரைந்து சென்று லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றினர். பின்னர் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேகத்தடை
இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பாலத்தில் உயர்கோபுர மின்விளக்கு மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால் பாலத்தில் மின் விளக்கு, வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story