ெரயில் மோதி பன்றிகள் பலி
நரிக்குடி அருகே ரெயில் மோதி பன்றிகள் பலியாகின.
காரியாபட்டி,
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளது. விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பயிரிடும் பொருட்களை இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் நரிக்குடி அருகே மானூர் பகுதியில் ெரயில் மோதி 4 காட்டுப்பன்றிகள் இறந்தன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த காட்டுப்பன்றிகளை மீட்டு பனைக்குடி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story