கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 43 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 43 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 1:15 AM IST (Updated: 26 July 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:

தீவிர சோதனை 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கடந்த 22 மற்றும் 23-ந்தேதிகளில் மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களாக குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை விற்ற 126 பேர் கைது செய்யப்பட்டனர். 
அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக போலீசார் மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். 
43 பேர் கைது 
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் சசிகலா (வயது 45), தொன்னையன் கொட்டாய் ரவி (42), பாரதி நகர் சபீர் (38), பையனப்பள்ளி ஜாவித் பாஷா (412), துவாரகாபுரி துரை (45), பாறைகொட்டாய் செல்வம் (37) உள்பட மாவட்டம் முழுவதும் 43 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story