பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணமோசடி
பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியை சேர்ந்தவர் ராஜேஸ் கண்ணன். இவரது மனைவி கார்த்திகா (வயது 27). இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறியுள்ளார். மேலும் கார்த்திகாவின் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் எனவும், அந்த கார்டின் எண் மற்றும் ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை கேட்டுள்ளார். இதனை நம்பிய கார்த்திக ஏ.டி.எம்.கார்டின் எண் மற்றும் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். இதனை வைத்து அந்த மர்ம நபர் கார்த்திகாவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.13 ஆயிரத்து எடுத்தனர். தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் கார்த்திகா அதிர்ச்சியடைந்தார். நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபா் குறித்து விசாரணை நடத்தியதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story