கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்தனர்
புதுக்கோட்டை
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 974 ஆக உயர்ந்தது. இந்தநிலையில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 31 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 362 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 376 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story