வீட்டில் பெட்ரோல் விற்ற 3 பேர் கைது
வீட்டில் பெட்ரோல் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன்(வயது 50), ராதாகிருஷ்ணன்(61) மற்றும் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(55) ஆகியோர் அவர்களது வீட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோலை விற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 3 பேரும் பெட்ரோல் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பெட்ரோலை போலீசார் கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story