தெலுங்கானாவில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வருகை


தெலுங்கானாவில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வருகை
x
தினத்தந்தி 26 July 2021 1:52 AM IST (Updated: 26 July 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 2,600 டன் ரேஷன் அரிசி வந்தது.

நெல்லை:
தெலுங்கானா மாநிலம் திட்டப்பள்ளியில் இருந்து 42 ரெயில் பெட்டிகளில் 2,600 டன் எடை கொண்ட 52,917 ரேஷன் அரிசி மூடைகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை அந்த சரக்கு ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அங்குள்ள சரக்கு இறங்கு தளத்தில் நிறுத்தப்பட்ட ரெயிலில் இருந்து தொழிலாளர்கள் அரிசி மூடைகளை இறக்கி, லாரிகளில் ஏற்றினர். ரேஷன் அரிசி மூடைகள் ஸ்ரீபுரத்தில் உள்ள நுகர்பொருள் சேமிப்பு கிட்டங்கியில் சேமித்து வைக்கப்பட்டது.

Next Story