மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை தீவிரம் + "||" + Plastic eradication test intensity

பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை தீவிரம்

பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை தீவிரம்
பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை தீவிரம்
கோத்தகிரி

தமிழகத்தில் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த தடை இருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

ஆனால் சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நுழைவு வரி வசூல் செய்யவும், பிளாஸ்டிக் சோதனை செய்யவும் நியமிக்கப்பட்டு உள்ள முன்னாள் ராணுவத்தினர் அதை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் முன்னாள் ராணுவ வீரர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் மற்றும் ஊழியர்கள் தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசி எறிந்துவிட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என வாகனங்களில் வந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து ரூ.650 அபராதமும் விதிக்கப்பட்டது.