மறைந்த முன்னாள் ஐ.ஜி. அருளின் மகன் மைக்கேல் அருள் திடீர் கைது


மறைந்த முன்னாள் ஐ.ஜி. அருளின் மகன் மைக்கேல் அருள் திடீர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 9:16 AM IST (Updated: 26 July 2021 9:16 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் ஐ.ஜி. அருளின் மகன் மைக்கேல் அருள், அவரது மனைவியின் ஜீவனாம்ச வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை,

மறைந்த முன்னாள் ஐ.ஜி. எப்.வி.அருளின் மகன் மைக்கேல் அருள் (வயது 74) சென்னை பாந்தியன் சாலையில் வசித்து வந்தார். அவரது மனைவி ஜெனீபர் அருள். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர்.

ஜெனீபர் அருள் தனக்கு ஜீவனாம்சம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ரூ.3 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மைக்கேல் அருள் ஜீவனாம்சம் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜெனீபர் அருள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மைக்கேல் அருளுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கைது-சிறை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மைக்கேல் அருள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்க்க சிறைத்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

Next Story