மாவட்ட செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து + "||" + Sudden fire at a private company near Singapperumal temple

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ மளமளவென எரியத் தொடங்கியது.


உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர்

செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதி தீயணைப்பு நிலைய வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

அலுவலகத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் எரிந்த பொருள்களை கணக்கிடும் பணியில் தொழிற்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தீப்பெட்டி கழிவுகளில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி கழிவுகளில் இருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு
தாயில்பட்டி அருகே இருசக்கர வாகனத்திற்கு மர்மநபர்கள் தீவைத்தனர்.
3. கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ
கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
4. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
5. தனியார் கம்பெனியில் தீ விபத்து 10 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்
மதுரவாயல் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.