திருவள்ளூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 100 பேர் மீது வழக்கு
திருவள்ளூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க.வினர் 100 பேர் மீது வழக்கு.
திருவள்ளூர்,
பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. நிர்வாகிகள் 100 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story