மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + railway workers protest in thoothukudi

தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிளை தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் தூத்துக்குடி ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் காந்தி சேகர், கிளை செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும், பொதுமக்களுக்கு பயன்பாட்டில் உள்ள இந்திய ரெயில்வேயை தனியாருக்கு வழங்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அகில இந்திய ரெயில்வே ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மிஸ்ராவின் தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.