போளூர் அருகே தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்த கணவர் மாயம்


போளூர் அருகே தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்த கணவர் மாயம்
x
தினத்தந்தி 26 July 2021 7:01 PM IST (Updated: 26 July 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே தாய்- மகன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்த கணவர் மாயமாகிவிட்டார்.

போளூர்

கிணற்றில் குதித்து தற்கொலை

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன் பாளையத்தை சேர்ந்தவர் சாந்திராஜ் (வயது 53). ஆங்கில மருந்து, மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, மருந்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். இவருடைய மனைவி மீரா, மகன் தேவகுமார். இவர்கள் நேற்று முன்தினம் போளூர் அடுத்த மண்டகொளத்தூரரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வந்துள்ளனர்.

அப்போது அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கிணற்றில் பிணமாக மிதந்த மீரா, தேவகுமார் ஆகிய இருவரையும் போலீசார் மற்றும் தீணைப்பு வீரர்கள் மீட்டனர். கிணற்றின் அருகில் சாந்திராஜ் எழுதிய கடிதம் கிடந்தது. அதில் குடும்ப த்தோடு தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. 

கணவர் மாயம்

அதனால் சாந்திராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என 3 மோட்டார்கள் மூலம்கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். இரவு 11 மணி வரை தண்ணீரை வெளியேற்றிய பிறகும் சாந்திராஜ் உடல் கிணற்றில் இல்லை. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டு பிடிக்க வும், அவர் வசித்த நல்லவண்பாளையத்தில் விசாரணை மேற்கொள்ளவும் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

மனைவி, மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும், சாந்திராஜ் மனம்மாறி வேறு எங்கேயாவது சென்று விட்டாரா?. அல்லது வேறு இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story