கிராமமக்கள் கலெக்டர்அலுவலகம் முற்றுகை


மக்கள் கலெக்டர்அலுவலகம் முற்றுகை
x
மக்கள் கலெக்டர்அலுவலகம் முற்றுகை
தினத்தந்தி 26 July 2021 1:38 PM GMT (Updated: 26 July 2021 1:38 PM GMT)

கிராமமக்கள் கலெக்டர்அலுவலகம் முற்றுகை

கோவை

கோவை காரமடை அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் சாஸ்திரி நகர் பகுதியில் 320 குடும்பங்கள் உள்ளன. கடந்த 5 வருடங்களாக அவர்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் குடியிருந்து வருவதாக தெரிகிறது. இதனையடுத்து தற்போது மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை காலி செய்யுமாறு மக்களை வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாங்கள் அந்த பகுதியில் நீண்ட காலமாக வசிப்பதாகவும், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரியும் அப்பகுதி சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு  மனு கொடுக்க வந்தனர்.

போலீசார் ஒரு சிலரை மட்டும் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீசாரையும் மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். போலீசார் நுழைவு வாயிலை பூட்டி அவர்களை தடுத்தனர். 

இதனால் அவர்கள் வாயில் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு, அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாருடன் சிறிது வாக்குவாதத்துக்கு பின்னர் ஒரு சிலர் உள்ளே சென்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story