மாவட்ட செய்திகள்

வாலாஜா அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + Corona vaccine for the mentally ill

வாலாஜா அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

வாலாஜா அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மனநலம் பாதித்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கல் மற்றும் ஆதரவற்றோருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
 
முகாமில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களை அடையாளம் கண்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.