7 பேர் கைது


7 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 8:08 PM IST (Updated: 26 July 2021 8:08 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 32). இவரது உறவினரான இளம்பெண் ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் மகேஸ்வரி புகார் செய்தார். 

இதுபற்றி அறிந்த கிருஷ்ணமூர்த்தி தரப்பினர், நேற்று முன்தினம் மகேஸ்வரி வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மகேஸ்வரியை தாக்கியதோடு, அவருடைய வீட்டில் நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினர். 

இதனையடுத்து மகேஸ்வரி தரப்பினரும், கிருஷ்ணமூர்த்தி தரப்பினரும் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக வடமதுரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 24 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்தார்.

 இதில் பிரபு, அன்பரசு, ஜெயபிரகாஷ், இளவரசு, திருநாவுக்கரசு, கவியரசு, கண்ணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 17 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story